Print this page

6ஆம் திகதி தீர்மானம்

September 04, 2019

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நிலவும் சிக்கல்கள் எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெற உள்ள கலந்துரையாடலில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி வேட்பாளரை வெளியிடாமல் இருப்பது ஐக்கிய தேசிய முன்னணியின் ஆதரவாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.