Print this page

தற்கொலைதாரிகளின் தொலைபேசி அறிக்கை ஏப்.பீ.ஐயிடம்

September 05, 2019

உயிர்த்த ஞாயிறுத் தினத்தன்று தற்கொலை தாக்குதல்களை நடத்தியவர்கள், அந்த தாக்குதல்களை நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்கியவர்கள் பயன்படுத்திய கையடக்க தொலைபேசிகள், அந்த தொலைபேசிகளின் சில பிரிவுகள் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு தயாரிக்கப்பட்ட ஐந்து அறிக்கைகள், ஐக்கிய அமெரிக்காவின் விசாரணை பணியகம் (எப். பீ.ஐ.) க்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

மேற்படி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவின் கவனத்துக்கு  4ஆம் திகதி கொண்டுவந்தனர். 

ஐக்கிய அமெரிக்காவின் விசாரணை பணியகம் (எப். பீ.ஐ.) அனுப்பியிருந்த இந்த அறிக்கை, அந்த சம்பவங்களுடன் தொடர்புடைய எதிர்ப்பார்க்கப்பட்ட அறிக்கையாகும். அதனடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என குற்றப்புலனாய்வு பிரிவினர், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். 

 

இந்த தற்கொலைத் தாக்குதல்கள் தேசிய தௌஹீத் ஜமாஆத் அமைப்பின் உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என, விசாரணைகளின் ஊடாக ஏற்கவே, உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

Last modified on Friday, 06 September 2019 02:55