Print this page

சஹ்ரானின் மனைவி கக்கினார்

September 05, 2019

உயிர்த்த ஞாயிறுத் தினத்தன்று தற்கொலை தாக்குதல் நடத்திய தேசிய தௌஹீத் ஜமாஆத் அமைப்பின் தலைவரென அறியப்பட்ட, கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் தற்கொலை நடத்திய மொஹமட் சஹ்ரான் ஹாசிமின் மனைவியிடம் இரண்டாவது தடவையாகவும் இரகசிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்கவின் முன்னிலையில், மேற்படி வழக்கு நேற்று (4) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இரண்டு மணித்தியாலயங்கள் அப்பெண், இரகசிய வாக்குமூலமளித்துள்ளார். 

அதனடிப்படையில் மேற்படி வழக்கு, எதிர்வரும் 25ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படத்தும் உத்தரவின் கீழ், கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சஹ்ரானின் மனைவி, அப்துல் காதர் பாத்திமா காதர் என்ற சந்தேகநபரே, இவ்வாறு இரண்டு மணிநேரம் வாக்குமூலமளித்துள்ளார்.

இதன்போதே, பல்வேறான இரகசியங்கள் அவர், தெரிவித்துள்ளார் என்றும் அதனடிப்படையில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றும், தகவல்கள் வெளியாகியுள்ளன.