Print this page

ரணிலை நூலிழையில் காப்பாற்றினார் கரு

September 05, 2019

பாராளுமன்றம் கலைந்திருந்தால்,  அரசாங்கத்தை கலைத்துவிட்டு ஜனாதிபதி மைத்திரிபால, புதிய அரசாங்கமொன்றுக்கு அழைப்பு விடுத்திருப்பார்.

அவ்வாறானதொரு சந்தர்ப்பம் பாராளுமன்றத்தில் இன்று (5) ஏற்பட்டிருந்தது. 

எனினும், அதனை சபாநாயகர் கரு ஜயசூரிய நூலிழையில் காப்பாற்றி ரணிலுக்கும் தன்னுடைய விசுவாசத்தை காண்பித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் இன்று, நிதித் தொடர்பிலான சட்டமூலமொன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

ஸ்ரீ லஙாக ஏற்றுமதி அபிவிருத்தி சட்ட கட்டளைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான விவாதம் நடைபெற்றது. 

அந்த விவாத்தில் உரையாற்றுவதற்கு ஆளும் தரப்பில் உறுப்பினர்கள் இறுதி நேரத்தில் இல்லாம் இருந்தனர்.

எனினும், சபையில் பெரும்பான்மையாக எதிர்க்கட்சி உறுப்பினர் இருந்தனர். 

இந்நிலையில், அந்த சட்டமூலம் மீது விவாதம் நடத்தப்படவேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிநின்றனர். 

அப்போது, சபைக்குத் தலைமைத்தாங்கிகொண்டிருந்த சபாநாயர் கரு ஜயசூரிய, அதற்கு இடமளிக்கவில்லை. 

 

இதனால் சபையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன. 

எனினும், சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்த சபாநாயகர், கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்தினார். 

 

வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என எதிரணியினர் கோரிநின்ற போது, ஆளும் தரப்பில் ஆகக் குறைந்தளவிலான உறுப்பினர்களே இருந்தனர்.

நிதி சட்டமூலமொன்று முதலாவது தடவையாக தோற்கடிக்கப்பட்டால். அதனை இரண்டாவது முறையாகவும் சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ளவேண்டும். இல்லையேல், பாராளுமன்றம் கலைக்கப்படும்.

அதன் பின்னர், ஜனாதிபதியினால் புதிய பாராளுமன்றம் நியமிக்கப்படும்.

எனினும், சபாநாயகர் இடையில் தலையிட்டு, அதனை நிறுத்தினார் 

 

Last modified on Monday, 09 September 2019 02:24