Print this page

கானாங்கோழி சின்னத்தில் சஜித் அணி

September 07, 2019

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு சந்தர்ப்பம் கிடைக்காவிடின், கானாங்கோழி சின்னத்திலேனும் களமிறங்குவோம் என சஜித் அணியினர் அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளராகுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காவிடின், தான் உள்ளிட்ட சஜித் பிரேமதாஸ, மங்கள சமரவீர, ஹர்ஷ டி சில்வா, ஏரான் விக்ரமரத்ன உள்ளிட்ட குழுவினர் கட்சியிலிருந்து விலகிவிடுவர் என, பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஜனாதிபதியை உருவாக்கும் நல்லதொரு சந்தரப்பத்தை இல்லாமற் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றியீட்டுவதற்கு சஜித் பிரேமதாஸ தயாராகவே இருக்கிறார் என்றார். 

பொலன்னுவையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Last modified on Saturday, 07 September 2019 02:24