Print this page

இழுபறி தொடர்கிறது; இன்று 1 மணிக்கு மாநாடு

September 07, 2019

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யாரென இதுவரையிலும், முடிவொன்று எட்டப்படாமையால், அக்கட்சிக்குள் நிலவும் கருத்துமோதல்கள், முரண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் அனைவும் கொழும்புக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு கொழும்பு, சுகததாஸ உள்ளக அரங்கில் விசேட மாநாடொன்று நடத்தப்படவுள்ளது என அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ  தலைமையில் இந்தக் மாநாடு, இன்று பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Last modified on Saturday, 07 September 2019 02:47