Print this page

தேர்தல் திகதி நாளை அறிவிக்கிறார் மஹிந்த

September 08, 2019

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி, வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான காலவரையறை, பிரசாரங்கள் தொடர்பிலான கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பில், நாளை திங்கட்கிழமை அறிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது என அறியமுடிகின்றது. 

தேர்தல்கள் செயலகத்தில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில், நாளை இடம்பெறும் முக்கியமான கூட்டத்தில், இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாக இருந்தபோதும் ஜனாதிபதி தேர்தல் குறித்த உத்தியோகபூர்வமான அறிவிப்பு இம்மாதம் 15 ஆம் திகதிக்குப் பின்னரே இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

வேட்புமனு திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தக்கூடாது. கூட்டங்கள் தேர்தலோடு தொடர்புபட்ட விடயங்களுக்கு அவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில், 15ஆம் திகதி அறிக்கையொன்று தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படவிருக்கிறது. 

Last modified on Sunday, 08 September 2019 02:40