Print this page

ஐ.தே.கவுக்கு இறுதி நாட்கள் ஆரம்பம்

September 08, 2019

ஐக்கிய தேசிய கட்சியில் இடம்பெறும் அதிகார போட்டி அக்கட்சியின் முடிவை நோக்கி கொண்டு செல்வதாக  பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், பிரதமர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என கூறுகிறார் என்றால், ஒன்று அவர் போட்டியிடுவார் அல்லது சபாநாயகர் கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவார்.

சஜித் பிரேமதாசவிற்கு பின்வாங்க நேரிடும். ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து இருவர் போட்டியிடுவார்களாயின் எமது வெற்றி உறுதியாகும். அவர்கள் அந்த உதவியை எங்களுக்கு செய்ததால் நாங்கள் அதை விரும்புகிறோம் 

ஹங்வெல்ல பிரதேசத்தில் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை குறிப்பிட்டார்.

Last modified on Sunday, 08 September 2019 16:39