Print this page

கோத்தாவுடன் இணைந்தார் முரளி

September 08, 2019

 

தமிழர்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிலும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், அந்த கூட்டத்தில் பங்கேற்றார். 

கொழும்பு ஷங்க்ரி-லா  ஹோட்டலில் இன்று (08) நடந்த வியத்கம இளைஞர் மாநாட்டின் அமர்வில் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கலந்து கொண்டுள்ளார்.

கோத்தாபய ராஜபக்சவிற்கு ஆதரவான இந்த அமைப்பின் வருடாந்த மாநாடு இன்று காலை தொங்கியிது.

ஏழு அமர்வுகளாக நடந்த இந்த மாநாட்டின் இறுதியில், தனது கொள்கை விளக்கவுரையை கோத்தாபய ஆற்றினார்.

வணிக நம்பிக்கையை உருவாக்குதல், அறிவு பொருளாதாரத்திற்கான கல்வித் துறையை மாற்றுவது, உலகளாவிய போக்குகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கான சவால்கள் மற்றும் ஒழுக்கமான மற்றும் வளர்ந்த ஜனநாயகத்தை இலங்கை விரைவாகப் பின்தொடர்வதில் இளைஞர்களின் பங்கு உள்ளிட்ட தலைப்புக்களில் அமர்வுகள் இடம்பெற்றன.

இந் நிகழ்விலேயே முத்தையா முரளிதரனும் கலந்து கொண்டிருந்தார்.

Last modified on Sunday, 08 September 2019 16:53