Print this page

ஐ.தே.ச சதுரங்கத்தில் 77க்கு 51

September 09, 2019

செஸ் விளையாட்டை தமிழில் சதுரங்கம் என்றே அழைப்பர்.  அதில், ராணிக்கு பக்கத்தில் காவலர்கள் சகிதமிருக்கும் ராஜாவை வீழ்த்துவதற்கு, காவலர்களை வீழ்த்தவேண்டும். போராளிகளை வீழ்த்தி விளையாண்டால், மறுபக்கத்தில் ராஜாவை இழந்து தோல்வியடையதான் வேண்டும்.

அதேபோலதான் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் உள்ளது என பரவலாகப் பேச்சப்படுகின்றது.

காவலர்களுடன் கட்சியின் தலைவர் ரணில் நிற்க, போராளிகள் குழுவுடன் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ நிற்கிறார் என தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியோ, ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படும் வரையிலும், இந்த சிக்கல்கள் இடம்பெறும். வேட்பு மனுக்கள் கோரப்பட்டு  விட்டால், யூகங்கள் எல்லாமே கலைந்துவிடும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் பெரும்பான்மையானவர்கள் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கின்றனர். 

எனினும், கட்சியின் செயற்குழுவின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கே உள்ளது. 

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை நியமிக்குமாறு, 77 உறுப்பினர்களில் 51 பேர் கோரியுள்ளனர். 

 

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களும் சஜித் பிரேமதாஸவுக்கே ஆதரவை நல்குகின்றனர். 

ஆகையால், ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையிலான போட்டி வலுப்பெற்றுள்ளது என அறியமுடிகின்றது. 

 

Last modified on Wednesday, 11 September 2019 01:51