Print this page

சஜித்-கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பு

September 09, 2019

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் எண்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா கண்காட்சியின் பிரதான விருந்தினராக, அமைச்சர் சஜித் பிரேமதாஸ பங்கேற்றிருந்தார். 

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் வகையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சரவணபவன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

அமைச்சர் சஜித்துடன், நிதி இராஜாங்க அமைச்சர் ஈரான் விக்ரமரத்ன பங்கேற்றிருந்தார். 

 

Last modified on Tuesday, 10 September 2019 02:10