Print this page

ரூபவாஹினியை கைப்பற்றினார் மைத்திரி

September 09, 2019

ஸ்ரீ லங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை, அரச பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

அரச பாதுகாப்பு அமைச்சின் ஜனாதிபதி வசமே உள்ளது. அதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல், இன்றிரவு வெளியானது. 

ஸ்ரீ லங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனம் அதன் நிர்வாகம் தொடர்பில் கடந்த காலங்களில் கடுமையான பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய நிதியமைச்சர் மங்கள சமரவீர, ஊடகத்துறை அமைச்சராக இருந்த போது, ஸ்ரீ லங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக இனோகா சத்யங்கனி பதவிவகித்தார்.

ஊடகத்துறை அமைச்சராக ருவன் விஜயவர்தன நியமிக்கப்பட்டபோது, இனோகா சத்யங்கனியை அப்பதவியிலிருந்து நீக்கினார். இதனால் நிர்வாக முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Last modified on Monday, 09 September 2019 17:15