Print this page

அரசியல் ஓய்வை அறிவித்தார் ரணில்

September 11, 2019

 

செப்டெம்பர் 10ஆம் திகதி இரவு, பிரதமர் ரணிலுக்கும் அமைச்சர் சஜித்துக்கும் இடையில், முக்கிய அமைச்சர்கள் பங்குப்பற்றலுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் தொடர்பிலான இறுதித் தீர்மானம் எதுவும் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்துள்ளது. 

எனினும், பிரதமருடனான சந்திப்புத் தொடர்பில், சஜித் பிரேமதாஸ தன்னுடைய தரப்பினருடன் கலந்துரையாடியதன் பின்னரே, ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்தார். 

அதன்போது, பிரதமருடனான பேச்சுவார்த்தையில் நல்லமுன்னேற்றம் ஏற்பட்டது என்றார். 

சஜித்துக்கும் ரணிலுக்கும் இடையில் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறவேண்டும் என சஜத் தரப்பு பேச்சுவார்த்தைக்கு நேரத்தை கேட்டிருந்தது.

எனினும், அமைச்சர்களான கபீர் ஹாசிம், மலிக் சமரவிக்ரம, ராஜித்த சேனாரத்ன மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோரும் 10க்கு10 பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தனர். 

நல்லமுறையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. எனினும், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது, அதற்கான திகதியை குறித்துகொள்வது. பேச்சை முன்னெடுத்து செல்வதா இல்லை, என்பது தொடர்பில் எவ்விதமான தீர்மானமும் எட்டப்படவில்லை.

அதுதொடர்பிலான யோசனைகள் எதனையும் சஜித் தரப்பினர், 10க்கு10 பேச்சில் முன்வைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவினால், ஜனாதிபதி வேட்பாளராக தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அரசியலிருந்து ஓய்வு பெறுவதற்கு தான் தயார் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியானால், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவே தெரிவு செய்யப்படுவார் என யோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரும்பவில்லை என்றும் அறியமுடிகின்றது.

இந்நிலையில், ரணிலை பிரதமராக்குவோம் என சஜித் தரப்பினரால், வெளிப்படையாக இதுவரையிலும் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Last modified on Thursday, 12 September 2019 06:00