Print this page

மகேந்திரனை கொண்டுவரும் ஆவணங்கள் கையளிப்பு

September 13, 2019

மத்திய வங்கியின் பிணைமுறி வழக்கில் முதலாவது பிரதிவாதியான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை, இலங்கைக்குள் கொண்டுவருவதற்கான சகல ஆவணங்களும், கையளிக்கப்பட்டுள்ள என இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

சிங்கபூரிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் இவை கையளிக்கப்பட்டுள்ளன  அமைச்சு அறிவித்துள்ளது. 

சிங்கபூரிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஷசிகலா  பிரேமவர்தனவிடம் அந்த ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. 

இலங்கையிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட, வெளிநாட்டலுவல்கள் அமைச்சை சேர்ந்த உயரதிகாரியினால், இவை கையளிக்கப்பட்டுள்ளன என வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதற்காக, 21 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய ஆவணங்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த 6 ஆம் திகதியன்று கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Last modified on Friday, 13 September 2019 11:59