Print this page

‘கஷ்டப்பட்டேன், முடியாவிட்டால் போய்விடுவேன்’

September 13, 2019

கடுமையான சந்தர்ப்பங்களில் கட்சிக்காக கஷ்டப்பட்டு விட்டேன், அந்த சந்தர்ப்பங்களில் கட்சியை காப்பாற்றினேன். வெற்றிப்பெறமுடியுமான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன். இல்லையேல் வெளியேறிவிடுவேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

70 வருடங்களாக இந்த நாட்டின் அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்த எனக்கு, அரசியலிருந்து ஓய்வு பெறுவது என்பது அவ்வளவு கஷ்டமாக காரியமல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பியகம, களனி தேர்தல் தொகுதிகளைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பழைய ஆதரவாளர்களிடத்தில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தனர். 

அண்மைய பாடசாலை, நல்ல பாடசாலை என்ற வேலைத்திட்டத்தை மன்னாரில் ஆரம்பிப்பதற்கு முன்னர் இந்த  சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றது. 

கட்சியின் தலைவராக, கட்சியின் தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி வெற்றிப்பெறவேண்டும்.  

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அந்த பொறுப்பை தன்னால் நிறைவேற்றிக்கொள்ள முடியுமாயின், கட்சியிலிருந்து விலகிச் செல்வதற்கும் தான் தயார் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 

Last modified on Friday, 13 September 2019 12:55