Print this page

ஐ.தே.க ஒழுக்காற்று குழு அதிரடி, இருவரின் உறுப்புரிமை இரத்து

September 13, 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழு அதிரடியான தீர்மானத்தை எடுத்துள்ளது.

அந்த தீர்மானத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ளது.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த கட்சியின் உறுப்பினர்களான, சுஜீவ சேனசிங்க மற்றும் அஜித் பி. பெரேரா ஆகிய இருவரையும் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்குமாறு, ஒழுக்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது.

இது தொடர்பில், கட்சியின் தலைவரினால் எடுக்கப்படும் தீர்மானத்துக்குப் பின்னரே, ஒழுக்காற்றுக்குழு தன்னுடைய இறுதி முடிவை அறிவிக்கும் என அறியமுடிகின்றது. 

Last modified on Saturday, 14 September 2019 15:30