Print this page

மைத்திரியை சந்தித்தார் கனிமொழி

September 13, 2019

தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருக்கும், திராவிட முன்னேற்ற கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, சந்தித்துள்ளார்.

சினேகபூர்வ சந்திப்பாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இல்ல திருமண விழாவில் திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்றார்.

 ரவூப் ஹக்கீமின் மகளது திருமணம் கொழும்பில் அண்மையில்நடைபெற்றது.

இத்திருமணத்தில் இலங்கை மற்றும் வெளிநாட்டு அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் இருந்து திமுக எம்.பி கனிமொழி, மமகவின் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை கனிமொழி உள்ளிட்டோர் சந்தித்தனர்.