Print this page

ஜனாதிபதி வாக்களிப்பு நடக்கும் திகதி

September 14, 2019

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு, தேர்தல்கள் ஆணைக்குழுவினால், அடுத்தவாரம் இறுதிக்குள் வெளியிடப்படும். 

ஜனாதிபதி தேர்தலை அறிவிப்பதற்காக உத்தியோகபூர்வ அதிகாரம், கடந்த 15ஆம் திகதியிலிருந்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு  கிடைத்துள்ளது. 

ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் கீழ் அந்த அதிகாரம் கிடைத்துள்ளதென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.. 

அதனடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு எதிர்வரும் 22 ஆம் திகதியன்று வெளியிடப்படும்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு, ஒக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் கோரப்படும். 

மேற்குறிப்பிட்ட திகதிகளில், அறிவித்தல்கள் வெளியிடப்படுமாயின் ஜனாதிபதி வாக்களிப்பு நவம்பவர் 16 ஆம் திகதியன்று இடம்பெறும்.

அதற்கு பிந்திய திகதிகளில் அறிவிப்புகள் வெளியிடப்படுமாயின், நவம்பர் 23ஆம் திகதியன்று வாக்களிப்பு நடத்தப்படும் என அறியமுடிகின்றது.

Last modified on Tuesday, 17 September 2019 01:02