Print this page

தெமட்டகொடை வீட்டில் சிலிண்டரே வெடித்தது

September 15, 2019

தெமட்டகொடை மஹவில கார்டன் பகுதியில் உள்ள வீட்டில்  இன்று (15) காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்துக்கு எரிவாயு சிலிண்டரே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த பெண்கள் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வெடிப்புக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சமயல் எரிவாயு சிலிண்டர் வெடித்தமையாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கண்டறிந்துள்ளனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் தெமடகொட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Last modified on Sunday, 15 September 2019 07:56