Print this page

ஹிஸ்புல்லா, மகன் சாட்சியளிக்க வரவில்லை

September 17, 2019

பாராளுமன்றத்தில் இன்று, பெற்றிக்கலோ கெம்பஸ் தொடர்பில், கோப் குழு விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இருந்தது.

அதில், பெற்றிக்கலோ கெம்பஸ், அதனோடிணைந்த ஹீரா நிறுவனம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவிருந்தன. 

விசாரணைகளுக்காக, அவையிரண்டின் பிரதானியான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் அவருடைய மகன் ஹராஸ் ஹிஸ்புல்லா ஆகிய இருவரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இன்று (17) அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவ்விரும் சமூகமளிக்கவில்லை. 

வெளிநாட்டுக்கு தூதுக்குழுவாகச் சென்றிருப்பதனால், கோப் குழு விசாரணையில் பங்கேற்கமுடியாது என கடிதம் மூலம் கோப் குழுவுக்கு அறிவித்துள்ளனர். 

வெளிநாட்டில் பங்கேற் தூதுக்குழுத் தொடர்பிலான கடிதத்துடன் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதியன்று, கோப் குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு, கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துநெத்தி எம்.பி, அவருக்கு பணித்துள்ளார். 

 

 

Last modified on Wednesday, 18 September 2019 00:40