Print this page

“சிம்” கொடுத்து சிக்கியவருக்கு விளக்கமறியல்

September 17, 2019

ஒன்பது சிம் காட்களை, புகைப்பொருள் பொதிக்குள் வைத்து, கைதியொருவருக்கு கொடுத்தார் என்றக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபரை, எதிர்வரும் 2ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு அழைத்துவரப்பட்டு, நீதிமன்ற சிறைக்கூண்டில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிக்கே, இவ்வாறு ஒன்பது சிம் அட்டைகளை அவர் கொடுத்துள்ளார். 

புகைப்பொருட்கள் அடங்கிய இரண்டு பொதிக்களுக்குள் வைத்தே, சிம் அட்டைகளை சந்தேகநபர் கொடுத்துள்ளார்.

அங்கிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் அதனை கண்டதுடன், சந்தேகநபரையும் கைதுசெய்தனர். 

கைது செய்யப்பட்டவரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.  

சீனிவத்த அளுத்கமயை வசிப்பிடமாகக் கொண்ட மொஹமட் தாஹீர் மொஹமட் முஹுசீன் என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

பேருவளை கடற்கரையில் 277 கோடி ரூபாய் பெறுமதியான 231 கிலோகிராம் ஹெரோய்ன்் போதைப்பொருளை கடத்தினர் என்றக் குற்றச்சாட்டப்பட்ட வழக்கில், இரண்டாவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள மொஹமட் ரிஷ்வி மொஹமட் பர்ஷான் என்பவருக்கே இந்தப் பொதியை கொடுப்பதற்கு சந்தேகநபர் கொடுத்துள்ளார். 

 

Last modified on Tuesday, 17 September 2019 16:46