Print this page

மைத்திரி இன்று ஆஜர்- ஊடகங்களுக்கு கதவடைப்பு

September 20, 2019

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பிலான காரணங்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுக்கும், பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (20) ஆஜராகவுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்துக்குச் சென்றே, தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

தெரிவுக்குழு விசாரணைகளை, அறிக்கையிடுவதற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும், ஜனாதிபதியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் போது ஊடகங்களை அனுமதிக்காமல் விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அளித்த சாட்சியம் தொடர்பில், ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை விடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Last modified on Friday, 20 September 2019 02:44