Print this page

‘யார் என்ன சொன்னாலும் போட்டியிடுவேன்’

September 23, 2019

யார் என்னதான் கூறினாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் கட்டாயம் போட்டியிடுவேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

சபாநாயகர் கருஜயசூரிய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதும் இதையே வலியுறுத்தியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வீரகெடிய பிரதேச செயலகப் பிரிவில் முலன்யாய கிராமத்தில் நிர்மாணித்த மாதிரிக்கிராமங்களை பொதுமக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளதாவது, 

ஊடகங்களை அவதானித்தால் அனைவருடைய கேள்வியும் சஜித் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா என்பதாகும். யார் என்னதான் கருத்துக்களை தெரிவித்து முட்டுக்கட்டைகளை போட்டாலும் நான் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கட்டாயமாக போட்டியிடுவேன் என்பதை அவர்களுக்கு தெரிவித்துக் ெகாள்கிறேன்.

எமது நாட்டிலுள்ள சகல மக்கனினதும் இன, மத,மொழி மற்றும் கட்சி வேறுபாடுகளின்றி அனைத்து மக்களினதும் ஆசீர்வாதத்துடனும் ஆதரவுடனும் நான் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவேன். இது மாத்திரமன்றி இவர்களது ஆசீர்வாதத்துடன் அதில் கட்டாயமாக வெற்றியும் பெறுவேன். தற்பொழுது சஜித் பிரேமதாஸவின் காலமே உருவாகியுள்ளது.

Last modified on Tuesday, 24 September 2019 02:14