Print this page

குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தில் குழப்பம்

September 23, 2019

பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தில் குழப்பகரமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதால், அங்கு பதற்றமான நிலைமையொன்று காணப்படுவதாக, எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அந்த திணைக்களத்தை சேர்ந்தவர்கள் இன்று முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கைகளினால் இவ்வாறான குழப்பகரமான நிலைமை ஏற்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. 

திணைக்களத்தின் செயற்பாடுகள் யாவும் முடங்கியுள்ளமையால், அங்கு வருகைதந்திருந்த பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இந்த குழப்பகரமான நிலைமையால், பொரளை-கொட்டாவா பிரதான வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.