Print this page

கடும் மழையால் ஒருவர் பலி- 5,539 பேர் பாதிப்பு

September 24, 2019

காலி மற்றும் மாத்தறை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் நிலவும் சீரற்ற வானிலையால், அவ்விரு மாவட்டங்களிலும் கடும் மழை பெய்து வருகின்றது. 

அங்கு மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளன. 

மண்சரிவில் சிக்கி ஒருவர் பலியானதுடன், மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார்.

இந்த இயற்கை அனர்த்தங்களினால், 1,475 குடும்பங்களைச் சேர்ந்த 5,539 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஏனைய 18 மாவட்டங்களில் நிலவும் வரட்சியினால், 2 இலட்சத்து 31ஆயிரத்து 817 குடும்பங்களைச் சேர்ந்த, 7 இலட்சத்து 90 ஆயிரத்து 588 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

 

 

Last modified on Tuesday, 24 September 2019 01:54