Print this page

சு.க முக்கியஸ்தர்கள் சஜித்துடன் கைகோர்க்க முஸ்தீபு

September 25, 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக. கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ நியமிக்கப்படவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலரும், சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளனர் என அறியமுடிகின்றது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பதை உத்தியோகபூர்வமாக இன்று அறிவிக்கவுள்ளது.

இந்த அறிவிப்புக்கு பின்னரே, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், ஐ.தே.கவுடன் இணைந்துகொள்ளவுள்ளனர் என அறியமுடிகின்றது. 

Last modified on Wednesday, 25 September 2019 03:32