Print this page

கோத்தாவை சந்தித்த மைத்திரி

September 25, 2019

கோத்தபாய ராஜபக்ச நேற்றிரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று இருத்தரப்புக்கும் இடையில் இணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும் விதம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் போது ஜனாதிபதி தரப்பில் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை எழுத்து மூலம் வழங்குமாறு கோத்தபாய ராஜபக்ச கோரியுள்ளதாகவும் பேசப்படுகிறது.

 

அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த அந்த கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ள நிலையில், நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோத்தபாய ராஜபக்ச அவசரமாக சந்தித்துள்ளதாக தெரியவருகிறது.