Print this page

பறந்தாலும் இறந்தாலும் அறிவிக்கவும்

September 26, 2019

 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பின் போது, வாக்குகள் முறைக்கேடாக பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ளது. அதனடிப்படையில், மரணமடைந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்றிருப்போர் தொடர்பிலான தகவல்களை ஆணைக்குழு திரட்டவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவிருக்கும் உங்களுடைய வீட்டில் இருப்போரில், பெயர்கள் வாக்காளர் இடாப்பில் இருந்தால், அவர்களில், 2019.10.01 திகதிக்குள் மரணமடைந்துவிட்டார் என்றால், வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார் என்றால் அவை தொடர்பில் அறிவிக்கவேண்டும்.

அந்த தகவல்களை 2019 ஒக்டோபர் 01ஆம் திகதிக்கு முன்னர், மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு அல்லது பிரதேச கிராம சேவகருக்கு அறிவுறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.