Print this page

'மிதக்கும் வாக்குகள் முக்கியம்’

September 27, 2019

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்ட வேண்டுமாயின் மிதக்கும் வாக்குகளும், புதிய வாக்குகளும் முக்கியமாகுமென ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில், இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். “சஜித் பிரேமதாஸவின் அழைப்பை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

அவருடைய தேர்தல் நடவடிக்கைகளின் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த பொறுப்பை செயற்படுத்துவதற்கு நான் தயார்.

கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை, கட்சிக்குள் இழுப்பதற்கான பாலமாக இருப்பதற்கு நான், தயாராகவே இருக்கின்றேன் என்றார்.