Print this page

புத்தகப்பிரியர் பிரதமர் கண்காட்சியை பார்வையிட்டார்

September 29, 2019

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு புத்தகப்பிரியர் என்று அறியப்பட்டவர். அவர்  பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறும் புத்தகக்கண்காட்சியில் நேற்று கலந்து கொண்டு புத்தகங்களை கொள்வனவு செய்து வருகின்றார். 

ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற ஒன்றுகூடல் நேரங்களில்கூட ஓய்வு நேரம் கிடைக்குமாயின் புத்தகம் வாசிப்பதிலேயே நேரத்தை போக்குவார் என்பதும் புத்தகவாசிப்பு தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் ஒருமுறை மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் ஒன்றின்போது, உங்கள் வாழ்கையில் நீங்கள் வாசித்த சிறந்த புத்தகம் அல்லது உங்களுக்கு பிடித்த புத்தகம் எது என்று கேட்கப்பட்டபோது, 'தம்மபதம்' என்று பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

Last modified on Sunday, 29 September 2019 01:50