Print this page

ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி

September 29, 2019

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இன்றையதினம் அறிவிக்கப்படவுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளிவந்திருந்தன.

கொழும்பில் தற்போது இடம்பெற்றுவரும் தேசிய மக்கள் இயக்கத்தின் மாநாட்டில் அவர் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க சற்று முன்னர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.