Print this page

‘மொட்டுக்கு ஆதரவளிக்க முடியாது’

September 29, 2019

 

கோத்தாவுக்கு வாக்களிக்கலாம் ஆனால், மொட்டு சின்னத்துக்கு ஆதரவளிக்கமுடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கூறினார்.

குருணாகலில் இன்று (29) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். மொட்டு கட்சிக்காரர்களுக்கும் எமக்குமிடையில் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுகள் கடந்த சில மாதங்களாக இடம்பெற்றுவருகின்றன.

மஹிந்த ராஜபக்ஷ, கோத்தாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ ஆகிய மூவருக்கும் எனக்குமிடையில் ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு நடைபெற்றது. தேசிய வேலைத்திட்டமொன்று முன்வைக்கப்பட்டால் இணக்கப்பாட்டின் அடிப்படையில் கோத்தாவுக்கு வாக்களிக்கலாம். ஆனால், மொட்டு சின்னத்துக்கு வாக்களிக்கமுடியாது என்றார்.

Last modified on Monday, 30 September 2019 02:15