Print this page

கோத்தாவின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரட்டை குடியுரிமை தொடர்பிலான மனுக்களின் தீர்ப்பு எதிராக,  உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக மனுதாரர்கள் இருவரும் அறிவித்துள்ளனர்.

இரட்டை குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட்மனு, கடந்த 4ஆம் திகதி நிராகரிக்கப்பட்டது. 

இந்த இரண்டு மனுக்களின் ஒன்று, பல்கலைக்கழக பேராசிரியர் சந்திரகுப்த தெனுவர என்பவராலும் மற்றைய மனு, காமினி வியங்கொட என்பவராலும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அவ்விருவமே, இந்தத் தீர்ப்பு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளனர். 

 மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி, 42 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்யலாம்.

அக்காலப்பகுதிக்குள் மேன்முறையீடு செய்யவுள்ளனர்.

 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட காரணங்கள் தொடர்பிலான விளக்கம், மனுதாரர்கள் இன்றையதினம் (07) அறிவிக்கப்படுவதற்கு, கடந்த 4ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Last modified on Monday, 07 October 2019 02:57