Print this page

சேருநுவர, கிளிநொச்சியில் கைதானோர் ரி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

திருகோணமலை சேருநுவர, கிளிநொச்சி அம்பாள்குளம் ஆகிய இடங்களில் வைத்து கைதுசெய்யப்பட்ட மூவரும், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் (ரி.ஐ.டி) ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

 சேருநுவர, கிளிவெட்டி பாலத்துக்கு அண்மையில், கடந்த 11 ஆம் திகதியன்று, ரி. 56 ரக துப்பாக்கியுடன், ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

அவர், கிளிநொச்சி அம்பாள்குளத்தை வசிப்பிடமாகக் கொண்ட, ஜோசப் பீட்டர் ரொபின்சன் (வயது 36) என்பவர் ஆவார்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர், கிளிநொச்சியிலுள்ள அவருடைய வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது, பெருந்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

அத்துடன், அவ்வீட்டிலிருந்த சந்தேகநபரின் மனைவி (வயது 23), அவருடைய சகோதரி (வயது 28) என்ற பெண்ணும் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளனது.

அவர்கள் மூவரிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன . சந்தேக நபரின் வீட்டில் பின்வரும் ஆயுதங்களும் கருவிகளும் கைப்பற்றப்பட்டன.

Last modified on Sunday, 13 October 2019 15:54