Print this page

ரணில்-சந்திரிகா இரகசிய பேச்சு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய உரையாடல் இடம்பெற்றுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரின் ஆதரவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது என அறியமுடிகின்றது.

தற்போது லண்டனில் இருக்கும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, நாடு திரும்பியதும், இருவருக்கும் இடையில் பகிரங்கமான சந்திப்பு இடம்பெறும் என உள்வீட்டுத் தகவல்கள் தெரிவித்தன.

Last modified on Wednesday, 16 October 2019 03:35