Print this page

இலங்கையில் தங்க சுரங்கம் இருக்கிறது

 திருகோணமலை, சேருவில இருப்புத்தாது சுரங்கத்தில் தங்கம் இருப்பதாக பூகோள மற்றும் கட்டிட ஆராச்சி நிலையம் தலைவர் அசேல இந்தவல தெரிவித்துள்ளார்.

கம்பஹா பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த தங்க சுரங்கத்திற்கு புதிய பொருளாதர பெறுமதியை உருவாக்குவதற்காக, தனியார் முதலீட்டாளர்களின் உதவிகளை பெற்றுக் கொள்ள எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மண்ணில் தங்கம் இருப்பதை உறுதி செய்ய முடிந்துள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.