Print this page

ஹூ அடித்தது யார்- சந்திரிகா மீது சந்தேகம்

 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை ஆதரித்து அனுராபுரத்தில், கடந்த 9ஆம் திகதியன்று நடைபெற்ற முதலாவது பிரசாரக் கூட்டத்தில் ஹூ சத்தமிட்டது தொடர்பில் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

சங்கரில்லா ஹோட்டலில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஹூ சத்தமிட்டமை தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்டது.

அக்கேள்விக்கு பதிலளித்த, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, “ஹூ சத்தமிட்டவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் தொடர்பில், உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை அழைத்துவந்த, ஒருங்கிணைப்பாளர்கள், ஹூ சத்தமிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பர் என்றார்.

இக்கேள்விக்கு பதிலளித்த விமல் வீரவன்ச, “ ஒரு கூட்டத்தில் அல்ல, இரண்டு, மூன்று கூட்டங்களில் ஹூ சத்தமிடப்பட்டுள்ளது.

ஒருவரே, ஹூ அடித்துள்ளார் என அறியப்பட்டுள்ளது. அவர், சந்திரிகாவினால் அனுப்பிவைக்கப்பட்ட ஆளாகவும் இருக்கலாம்” என்றார்.

Last modified on Tuesday, 15 October 2019 16:21