Print this page

மஹிந்தவின் புதல்வர் திருமணத்தில் இவர்கள் இல்லை


எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரின் திருமண வைபவம், எதிர்வரும் 24 ஆம் திகதியன்று, நடைபெறவுள்ளது.

தன்னுடை காதலியை அவர் கரம்பிடிக்கவுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் வெகுவிமர்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

தங்காலையிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திலேயே திருமண வைபவம் இடம்பெறவுள்ளது.

அந்த வைபவத்துக்கு மிகவும் நெருங்கியவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.

எனினும், இந்தியாவிலிருந்து அதிமுக்கிய விருந்தினர்கள் சிலர், திருமண வைபவத்தில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வைபவத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்பார். எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தன்னுடைய வாழ்த்து மடலை ஏற்கனவே அனுப்பிவைத்துவிட்டார் என்றும், அவர் பங்கேற்கமாட்டார் என்றும் அறியமுடிகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிங்பூருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளமையால், அவரும் இந்த வைபவத்தில் பங்கேற்கமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Last modified on Wednesday, 11 September 2019 01:32