Print this page

மலசலக்கூடத்துக்குள் நுழைந்து வன்புணர்வு

பெண்களுக்கான பொதுமலசலக் கூடத்துக்குள் அத்துமீறி நுழைத்து, மலசலக்கூடத்துக்குள்ளிருந்த மாணவியை வன்புணர்ந்த சமாதான நீதவான் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம், மாத்தறை தெவிநுவர பொது மலசலக்கூடத்திலேயே இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 15 வயதான மாணவி, பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கந்தர பொலிஸார், 16ஆம் திகதி கைதுசெய்துள்ளனர்.

மாத்தறை நகரிலுள்ள பாடசாலையொன்றில், 11 வகுப்பில் கல்விப்பயிலும் மேற்படி மாணவி, பாடசாலைக்கு சென்றுக்கொண்டிக்கும் போது, இயற்கை உபாதை ஏற்பட்டுள்ளது.

இதனால், பொதுமலசலக்கூடத்துக்குச் சென்றுள்ளார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த 55 வயதான சமாதான நீதவான், அந்த மாணவியை மடக்கிப்பிடித்து, வாயை முடி வன்புணர்ந்துள்ளார்.

எனினும், அவரது பிடியிலிருந்து தப்பிய மாணவி அதுதொடர்பில் பொலிஸில் முறையிட்டுள்ளார்.

அதனையடுத்து தேடி பார்த்தத்தில், வர்த்தகரான அவர், சமாதான நீதவானாகவும் உள்ளார் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.

அவரை மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Last modified on Thursday, 17 October 2019 00:42