Print this page

கைதான முக்கிய புள்ளி 2 மணிக்கு ஆஜர்

சிங்கபூர் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவிட்டு நாடு திரும்பிய, அவன்காட் மெரிடைம்ஸ்  நிறுவனத்தின் தலைவரான யாபா ஹெட்டியாராச்சி நிஷங்க யாப்பா சேனாதிபதி, குற்றப்புலான்வுப் பிரிவின் அதிகாரிகளினால், இன்று (17) அதிகாலை கைதுசெய்யப்பட்டார்.

அவன்காட் வழக்குத் தொடர்பில் காலி நீதவான் நீதிமன்றத்தில் விடுக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கடவுச்சீட்டு தடை கட்டளைக்கு அமையாவே, அவரை கைதுசெய்த சி.ஐ.டியினர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

அதேபோல, எவன்காட் சம்பவம் தொடர்பில் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கு விசாரணைக்காக, சந்தேகநபரை இன்று (17) பிற்பகல் 2 மணிக்கு ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஏனைய அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.