Print this page

பொத்தானை அமுக்கி “ஒத்திகை” பார்க்க மஹிந்த ஆலோசனை

எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறும் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் நவம்பர் 18ஆம் திகதி பிற்பகல் வேளையிலேயே அறிவிக்கும் வாய்ப்பு காணப்படுவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணையகத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

இம்முறை இடம்பெறும் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு நீளமானது என்பதால், வாக்குகளை எண்ண நீண்ட நேரம் எடுக்கும் என்பதே அதற்கு காரணமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, ஒரு மாகாணத்தில் ஒரு தேர்தல் தொகுதியிலாவது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி ஒத்திகை பார்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அந்த முயற்சி கைகூடுமாயின், அடுத்தடுத்த தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.