Print this page

100 கோடி ரூபாய் ஹெரோய்ன் சிக்கியது


100 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட மதிப்பைக் கொண்ட ஹெரோய்ன் போதைப்பொருள், கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேர் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இன்னுமிருவரை தேடி வலைவிரித்துள்ளதாக, விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் அமெரிக்க பிரஜைகள் இருவரும், ஆப்கானிஸ்தான் பிரஜைகள் இருவரும் அடங்குகின்றனர். அத்துடன் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொள்ளுப்பிடியிலுள்ள சொகுசு வீட்டுத் தொகுதியில் வைத்தே 90 கிலோகிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.