Print this page

ராஜபக்ஷர்களுடன் ராஜபக்ஷ இணைந்தார்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபகஷவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள விஜயதாஸ ராஜபக்ஷ, ராஜபக்ஷர்களின் முகாமில் ஏற்கனவே இருந்தவர் என்றும், அவர் ஒன்றும் புதிதாக இணையவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக பாராளுமன்றத்துக்கு தெரிவுச் செய்யப்பட்ட அவர், ஒன்றிணைந்த எதிரணியில் நீண்ட காலமாக இருந்துள்ளார். 

எதிரணி எடுக்கும் தீர்மானத்தின் பிரகாரமே, பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் செயற்பட்டுள்ளார்.

ஆகையால், அதுதொடர்பில் கவலைப்படத் தேவையில்லை. என்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரும் தம்முடன் இணைந்துவிட்டார் என மற்றுமொரு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி, கோத்தாபய ராஜபக்ஷ வெகுவிரைவில் படம் காட்டுவார் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

Last modified on Saturday, 19 October 2019 02:32