Print this page

கோத்தா குறித்து பொய் சொல்கின்றனர்- மஹிந்த

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின்னர் முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் சிலர் பொய் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சூரியவெவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

30 வருட யுத்தத்தை நிறைவடைய செய்வதற்கு கோத்தாபய ராஜபக்ஷ பெரும் பாடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சூரியவெவ தேர்தல் காரியாலத்தை அவர் ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், எவ்வித திட்டமும் இன்றி வீடுகள் கட்டப்படுவதாகவும் இலவசமாக தருவதாக கூறினாலும் மாதந்தம் பணம் கேட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.