Print this page

மைத்திரியை எம்.பியாக்க- இருவர் இராஜினாமா

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசியப் பட்டியலின் ஊடாக, பாராளுமன்றத்துக்குள் பிரவேசிக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கான, தன்னுடைய தேசியப் பட்டியல் எம்.பி பதவியை இராஜினாமா செய்வதற்கு, பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தீர்மானித்துள்ளார் என அறியமுடிகின்றது.

தனக்கு ஊவா மாகாண ஆளுநர் பதவி கிடைத்தால் மட்டுமே, தன்னுடைய தேசியப் பட்டியல் எம்.பி பதவியை இராஜினாமா செய்வேன் என டிலான் தெரிவித்துள்ளார் என அறியமுடிகின்றது. 

இந்நிலையில், தற்போது ஊவா மாகாண ஆளுநராக பதவி வகிக்கும், மைத்திரி குணரத்ன தன்னுடைய பதவியை இராஜினாமா செய்வதற்கு இணங்கியுள்ளார் என்றும் அறியமுடிகின்றது. 

 

 

Last modified on Monday, 28 October 2019 02:59