Print this page

குரோதத்தை ஏற்படுத்தும் வேட்பாளர்கள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவிக்கும் குரோதத்தை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை பிரச்சாரம் செய்யாதிருக்க அனைத்து ஊடகங்கள் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவிக்கும் சில கருத்துககளால் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதராக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

வேட்பாளர்கள் இனவாதம் மற்றும் மதவாதம் சார்ந்த கருத்துக்களை தெரிவித்து வருவதாக குறித்த தேர்தல் கண்காணப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

அத தெரணவிற்கு கருத்து தெரிவித்த பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

Last modified on Tuesday, 29 October 2019 03:23