Print this page

அதிரடியாக அறிவித்தார் சி.வி

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில், கடந்த காலவரலாறுகள், அக,புற சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தங்களுடைய வாக்குரிமைகளை பயன்படுத்துமாறு வடமான முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கையொன்றை இன்றுமாலை விடுத்துள்ள அவர், எமது 13 அம்ச கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் எவரும் முன்வரவில்லையென ஆதங்கப்பட்டார்.

இந்நிலையில், எந்த ஒரு சிங்கள வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு, தங்களுடைய விரலால் சுட்டிக்காட்ட முடியாது என்றும் தன்னுடைய அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.