Print this page

கடிகாரத்தை 5 மணி வரை திருகினார் மஹிந்த

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய ஒரு மணித்தியாலத்துக்கு அதிகரித்துள்ளார்.

அதனடிப்படையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு, நவம்பர் 16ஆம் திகதி காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணிவரையிலும் நடைபெறும்.

இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற தேர்தல்களுக்கான வாக்களிப்புகள் யாவும், காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை மட்டுமே நடைபெற்றன.

இம்முறை தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குச்சீட்டின் நீளமும் 26 அங்குலமாக உள்ளது. வாக்காளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

ஆகையால், ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் வாக்களிக்கமுடியாத நிலை ஏற்படும். இதனையடுத்தே, வாக்களிப்பு நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Last modified on Tuesday, 29 October 2019 17:27