Print this page

புனித பூமியாக மடு பிரகடனம்

வரலாற்றுச் சிறப்புமிக்க மடு திருத்தலத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தும் உறுதிப்பத்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மன்னார் பேராயரிடம் கையளித்தார்.

மன்னார் மாவட்டத்தில் மடு திருத்தலம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி, அதற்கான உறுதிப்பத்திரத்தை மன்னார் மறை மாவட்ட பேராயர் இம்மானுவேல் பேர்டினன்ட் அவர்களிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (29) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கையளித்தார்.

பேராயர் இம்மானுவேல் பெர்னாண்டோ உள்ளிட்ட கத்தோலிக்க பாதிரியார்களும் அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.