Print this page

அந்த 13 பேருக்கும் 14 நாள் நீடிப்பு

 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சந்தேகநபர்களில் 13 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 14 நாட்களுக்கு கல்முனை நீதவான் நீதிமன்றத்தால் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் இன்று( 29) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. அவர்களில் ஏழுபேர் தனியாகவும், ஏனைய ஆறுபேரும் தனியாகவுமே நீதிமன்றத்தில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்கள் காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமரு,து சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் வைத்தே கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Last modified on Wednesday, 30 October 2019 18:36